விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (17:45 IST)
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
விசா முறைகேடு தொடர்பாக  கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் மனுவை கார்த்திக் சிதம்பரம் உள்பட 3 பேரும் தாக்கல் செய்தனர்.
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இரு தரப்பு வாத பிரதிவாதங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விசா முறைகேடு வழக்கில்  கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோர் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து கார்த்தி சிதம்பரம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்