சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறிய நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேரவைச் செயலகம் மூலம் இன்று தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்மானம் நிறைவேறிய தினமே சட்டசபை செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன்பிறகு தீர்மானத்தின் நகல் முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.