மக்கள் எதிர்ப்பு எதிரொலி. திட்டத்தை கைவிட்ட கர்நாடக அரசு. தமிழகமும் பின்பற்றுமா?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (22:33 IST)
மக்கள் எதிர்ப்பால் மிகப்பெரிய பாலம் கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட்டது. இதைபோல மக்களின் உணர்வை புரிந்து கொண்டு நெடுவாசல் மீத்தேன் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 1,761 கோடி ரூபாய் மதிப்பில், இரும்பு மேம்பாலம் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற அந்த பகுதியில் இருக்கும் சுமார் 800 மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து இன்று கர்நாடக அரசு இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது

கர்நாடக அரசை பின்பற்றி தமிழக அரசும், மத்திய அரசும் மித்தேன் திட்ட விஷயத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முடிவெடுக்க வெண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்