நிவர் புயல் எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:19 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி சற்று முன்னர் புயலாக உருவாகி தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. நிவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரசால் மூடப்பட்டிருந்த பள்ளிகளை திறக்கலாம் என புதுவை அரசு அறிவித்திருந்தது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் பெற்றோர் அனுமதியுடன் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை முதல் கனமழை பெய்து வருவதால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்த பின்னர் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் ஏற்கனவே பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்