குமரியில் மனநலக்காப்பகத்தில் கொரோனா! – நோயாளிகளுக்கு தொடர் சோதனை!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (14:41 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது கன்னியாக்குமரி மன நலக் காப்பகத்தில் பலருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மன நலக்காப்பக நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாக்குமரி, மந்தாரம்புதூரில் உள்ள மன நலக்காப்பகத்தில் 46 நோயாளிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அங்குள்ள மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்