கண்ணகி-முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனை விபரங்கள்

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:24 IST)
கண்ணகி-முருகேசன் தம்பதி ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளின் தண்டனை விபரங்கள்
கடந்த 2003ஆம் ஆண்டு விருதாச்சலம் அருகே கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் ஆணவ கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது
 
சிபிஐ விசாரணை செய்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது. அதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டனர். இந்த நிலையில் சற்று முன் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 13 பேர்களில் 12 பேருக்கு ஆயுள் தண்டனை என்றும் ஒருவருக்கு தூக்கு தண்டனை என்றும் நீதிபதி தண்டனை விவரங்களை சற்றுமுன் அறிவித்துள்ளார்
 
இந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தீர்ப்பு காரணமாக கடலூர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்