தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட போதிலும், இன்னும் அவர் தலைவர் போலவே பேசி வருகிறார் என்றும், அவரிடம் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், அண்ணாமலை இன்னும் மாநில தலைவர் போல் தான் பேசி வருகிறார் என்றும், புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் தான் நான் தோல்வி அடைந்தேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார் என்றும், அவர்கள் ஆட்சியை கைப்பற்றும் மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.