நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:47 IST)
நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும் என மாவட்டத்தின் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை காரணமாக பல நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
 
அந்த நாட்களை ஈடு செய்திடும் வகையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் பள்ளி செயல்படும் என்றும் புதன்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்கும் என்றும் அறிவித்துள்ளார்
 
அதேபோல் இனிவரும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்