காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காத விவகாரம்: தமிழக தலைவர்களின் கருத்து

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (22:13 IST)
சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது எழுந்து நிற்காத விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்து பிரச்சனையின்போது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு கிடைத்த சரியான தீனியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜயேந்திரரை வச்சு செய்து வரு, தமிழக பிரபலங்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போமா!

டிடிவி தினகரன்: சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காதது சங்கடப் படுத்துகிறது.

திமுக எம்.பி. திருச்சி சிவா: தமிழ்த்தாய் வாழ்த்தின் போது, விஜயேந்திரர் எழுந்து நிற்காததற்கு காஞ்சி சங்கர மடம் அளித்த விளக்கம் ஏற்க முடியாதது -

முத்தரசன்: தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடும்போது யாராக இருந்தாலும் மரியாதை செலுத்த வேண்டும்; வைரமுத்துவை கண்டித்ததுபோல் விஜயேந்திரரையும் கண்டிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்

அமைச்சர் கடம்பூர் ராஜூ: யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; எந்த நிலைப்பாட்டில் விஜயேந்திரர் இருந்தார் என்று தெரியவில்லை

மதுரை ஆதீனம்: தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டிய பொறுப்பு விஜயேந்திரருக்கு உண்டு தமிழிற்கும் தமிழ்ச்சமுதாயத்திற்கும் உரிய மரியாதையை விஜயேந்திரர் அளிக்க வேண்டும்

கி. வீரமணி: தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

வேல்முருகன்: தமிழ்த்தாய் முன்பு விஜயேந்திரர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்...

தந்தை பெரியார் திராவிடர் கழகம்: "தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர், மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்" -

ஜெ.தீபா; மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று , தியானம் செய்யவதற்கான இடம்
பொது மேடை இல்லை. தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும், தியானம் கலைப்பீராக.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்