ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் பத்தாம் வகுப்பு மாணவி பலியான பரிதாபம்

திங்கள், 11 டிசம்பர் 2017 (08:59 IST)
காஞ்சிபுரத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சரிகா சிறுநீரக நோயால் அவதிப்பட்டிருந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது சிறுநீரகம் முற்றிலும்  பழுதானதால் உடனடியாக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் மாணவியின் பெற்றோர் காஞ்சிபுரம் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் உதவியை நாடினர்

ஆனால் எத்தனை மணிக்கு ஆம்புலன்ஸ் வரும் என்ற பதிலை 108 நிர்வாகம் முறையாக தரவில்லை. இதனால் மாணவியை சென்னைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மாணவியை சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரம் தாமதம் ஆனதால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

மாணவி சரிகாவின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம், ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் கிடைத்திருந்தால் சரிகாவின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் மாணவியின் பெற்றோர் புகார் கூறினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என - காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ இணை இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்