பதவியேற்பவர்களுக்கு வாழ்த்துக்கள்; கொரோனாவை கவனியுங்கள்! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (11:23 IST)
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக இன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்கும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தனிப்பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சியமைத்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்று கொள்கின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கும் எம்.எல்.ஏக்களுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்