மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! – சீமான் கோரிக்கை!

செவ்வாய், 11 மே 2021 (10:07 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணத்தை ரத்து செய்ய சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின் கட்டணங்களை செலுத்துவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை செலுத்து மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கோரிக்கை விடுத்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்!” என கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்