சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறியுள்ள கமல்ஹாசன் “உயர்வு தாழ்வு பேசுவோரை ஓட செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்திய அரசியாமைப்பு சட்டத்தை வகுத்தவரான அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அம்பேதக்ரின் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ,இனத்தாலோ, மொழியாலோ,தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது.அண்ணல் அம்பேத்காருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே.” என்று தெரிவித்துள்ளார்.