மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவள்ளுவர் கெட்டப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.
தமிழ் திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசனின் 67வது பிறந்ததினம் இன்று அவரது தொண்டர்களாலும், ரசிகர்களாலும் கொண்டாடப்படுகிறது. கமல்ஹாசனின் பிறந்தாளுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கமல்ஹாசனுக்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. திருவள்ளுவர் உருவத்தில் கமல் முகத்தை மார்ஃபிங் செய்துள்ள அந்த போஸ்டரில் “அகர முதல எழுத்தெல்லாம் உலக நாயகன் முதற்றே உலகு” என வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கமல்ஹாசன் அப்துல்கலாம், விவேகானந்தர் கெட்டப்பில் உள்ளது போன்ற போஸ்டர்களும் வைரலாகி வருகின்றது.