தமிழக கட்சிகளுக்குள் போர் : பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (14:17 IST)
ஒருபக்கம் தமிழகத்தின் மிக பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவில் நிறைய பிரச்சினைகள் போய் கொண்டிருக்க, பலர் கட்சிவிட்டு கட்சி தாவி கொண்டிருக்க, மறுபக்கம் சத்தமேயில்லாமல் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டங்களில் வீடியோ கான்ஃப்ரன்சில் பேசி கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

மே 1ம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்கள் தேர்தல் விதிமுறைகளால் ஒத்தி வைக்கப்பட்டன. அன்று கிராமசபை கூட்டம் நடக்கும் என அறிவித்ததுமே தீவிரமாய் அதில் இறங்கிய கமல் கிராமசபை கூட்டத்தின் முக்கியத்துவம், அதனால் ஏற்பட கூடிய பயன்கள் குறித்து ஊர் ஊராய் சென்று பேசினார்.

இந்நிலையில் இன்று நடக்கும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என சொல்லியிருந்தார். மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களும் கிராம மக்களோடு சேர்ந்து 72 கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். அங்கு நடப்பவற்ரையும் விவாதிப்பவற்ரையும் வீடியோ கான்ஃபரன்சில் பார்த்து பேசி வருகிறார் கமல்.

அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வந்து விட்டார்களா? பஞ்சாயத்து தலைவர் வந்தாரா? என்னென்ன திட்டங்கள் குறித்து பேசுகிறார்கள்? என்பதை கேட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

ஒருபக்கம் யார் ஆட்சி செய்வது என்று கட்சிகள் சண்டைபோட்டு கிடக்க சைலண்டாக மக்களோடு மக்களாக பஞ்சாயத்துக்கு போய் மறைமுகமாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் கமலஹாசன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்