சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னா. ஜெ நியூஸ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பிரசன்னாவின் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தீ பரவி புகைமூட்டமாகியுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதை உணரவில்லை. அந்த சமயம் மின்கசிவால் வீட்டிலுள்ள ஃப்ரிட்ஜ் வெடித்து நாலா பக்கமும் தீ பரவியிருக்கிறது.
வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் அடைக்கப்பட்டிருந்ததால் தீ பரவியது வெளியே யாருக்கும் தெரியவில்லை. காலையில் வீட்டுக்கு வந்த பணிப்பெண் வீட்டிலிருந்து புகையாக வருவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார். அவர்கள் போலீஸுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் சொல்லிவிட்டு வீட்டை உடைத்து உள்ளே போயிருக்கிறார்கள். ஆனால் தீயில் கருகி அந்த குடும்பமே சடலமாகி கிடந்திருக்கிறது.