ப்ளீஸ் இனிமேல் என்ன அப்படி சொல்லாதீங்க - தொண்டர்களுக்கு கமல் அறிவுரை

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (12:23 IST)
கமல்ஹாசன் துவங்கியுள்ள கட்சியின் கொடியேற்ற நிகழ்வின்போது அவரை புகழ்ந்து பாட தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தால் சர்ச்சை ஏற்பட்டது.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இரண்டு தினங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். அப்போது அங்கு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கூடியிருந்தனர். அப்போது, அவரை வாழ்த்தி எப்படி கோஷம் போட வேண்டும் என துண்டு பிரசுரங்கள் தயார் செய்யப்பட்டு தொண்டர்களிடம் கொடுக்கப்பட்டது. தொண்டர்கள் அவரை ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என புகழ்ந்து பாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பேசிய கமல் இதற்கு பதில் சொல்லும் இடத்தில் நான் உள்ளேன். நான் தொண்டர்களை அவ்வாறு கூற சொல்லவில்லை. அது பழையக் கூக்குரல். இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய கமல், பொது இடங்களில் இனி என்னை புகழ்ந்து கோஷங்களை எழுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்