இந்த ஆட்சி தானகவே கலையும் - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (19:49 IST)
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி தானாகவே கலையும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்தனர். அதேபோல், கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு கமல்ஹாசன் அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது:
 
15 வருடமாக எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். முதலில் வலியில் பேசினேன். அதன்பின் கோபத்தில் பேசினேன். தற்போது இன்னும் கொஞ்சம் உத்வேகத்துடன் பேசுகிறேன். அது முதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
 
தமிழக மக்கள், தங்களுக்கெனெ ஒரு தலைவனை தேடுவதை விட்டுவிட்டு ஒரு சமூக தொண்டனை தேட வேண்டும்.  
 
இந்த ஆட்சி தானாகவே கலையும், கலைக்க வேண்டும் என கூறுவதற்கு நீ யார் எனக் கேட்கிறார்கள். நான் மக்களில் ஒருவன். ஆட்சி கலைய நான் ஏதும் செய்கிறேனா என பார்ப்பது வேடிக்கை. அதற்கான அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து வருகிறார்கள்” எனக் கூறினார்.
அடுத்த கட்டுரையில்