தேர்தலில் தோற்றாலும் மக்கள் பணி தொடரும் - கமல்ஹாசன் பேட்டி

வியாழன், 10 மே 2018 (10:16 IST)
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அரசியலில் இருந்து விலக மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை தொடங்கினார். அதன் பின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் கூட மாதிரி கிராம சபை கூட்டத்தை நடத்தினார்.
 
இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “நான் வெற்றி பெறுவதற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்கள் பணி செய்வதே எங்கள் நோக்கம். எனவே தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அரசியலில் இருந்து நான் விலக மாட்டேன். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் அரசியல் விளையாடுகிறது. இது 40 ஆண்டுகளுக்கும் மேலான பிரச்சனை. நம் உரிமைக்காக நாம் போராட வேண்டும்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்