நீதி தாமதமாக கிடைத்துள்ளது: ஜெயகோபால் கைது குறித்து கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (20:13 IST)
பேனர் விழுந்ததால் மரணம் அடைந்த சென்னை இளம்பெண் சுபஸ்ரீ விவகாரத்தில் நீதி தாமதமாக கிடைத்துள்ளதாக நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேனர் அச்சடித்த அச்சகத்தை சீல் வைத்து லாரி டிரைவரையும் கைது செய்தனர். இந்தளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்ட போலீஸ், பேனர் வைக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி என்று கூறப்படும் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவரை மட்டும் கைது செய்யாமல் இருந்தது. இதனால் அரசியல் கட்சிகளும் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தபின்னர் ஜெயகோபாலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
 
 இந்தந் நிலையில் கிருஷ்ணகிரி அருகே தேன்கனிக்கோட்டை என்ற இடத்தில் ஜெயகோபால் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் தனியார் விடுதியில் ஜெயகோபாலை கைது செய்தனர்.
 
ஜெயகோபால் கைது குறித்து கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளது நிம்மதி அளிக்கின்றது. ஆனால் நீதி தாமதமாக கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த கைது குறித்து சுபஸ்ரீ பெற்றோர்கள் கூறியபோது, ‘பேனர் வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கின்றது. இந்த வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நீதி பெற்று தருவார்கள் என நம்புகிறோம்’ என்று கூறினர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்