சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் அவர் பரிதாபமாக பலியானார். இதனையடுத்து அந்த பேனரை தயாரித்த கடைக்கு சீல் வைக்கபட்டது. ஆனால், அந்த பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் தலைமறைவானார்.
இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இதில் திமுக கட்சி ஒரு படி முன்னுக்குப் போய் இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இதற்கு தடைவிதிக்க வலியுறுத்தி, பேனர் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அருகே உள்ல கிழாமாத்தூரில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் பேனெஅர் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிப்பு தொழிலை செய்து வருகிறார். இவர் இத்தொழிலை நடத்த ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தொழிலில் அதிகம் சிரமம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசுக்கு நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்து, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.