தலைமறைவான ஜெயகோபால் எங்கே? தனிப்படையின் தேடுதல் வேட்டையா? வேடமா?

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (11:38 IST)
சுபஸ்ரீ மரணத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், சாலையில் மோட்டார் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அதிமுக பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது பின்னே வந்த லாரி, அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இந்த சம்பவம் தமிழகத்தையே உழுக்கிய நிலையில் இதற்கு பல அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவந்தனர். 
இந்நிலையில் பேனர் வைத்த ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இன்று வரை அவரை போலீஸார் கைது செய்யவில்லை எனவும், இது குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் திமுகவினர் வாதாடினர்.
 
இதனைத் தொடர்ந்து, பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணாமாக இருந்த ஜெயகோபால் எங்கே?? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனைத்தொடர்ந்து அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
அதோடு இன்று தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஆனால், இந்த தகவல் உண்மையானதா அல்ல நீதிமன்றத்தின் கேள்வியால் கண்துடைப்புக்காக மேற்கொள்ளும் நடவடிக்கையா என மக்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்