சமீப காலமாக தமிழக அரசியல் குறித்தும் ஊழலுக்கு எதிராகவும் கடுமையாக கருத்துக்களை கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது வீட்டிற்கு சென்று சந்திக்க நேற்று கேரளா சென்ற கமலுக்கு மதிய உணவாக ஓணம் விருந்து பறிமாறப்பட்டது. அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கமல் தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து எதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் ஒரு அரசியல் சுற்றுலாவாக வந்ததாக கூறினார்.
மேலும் அவர் கூறும் போது தான் நிச்சயம் அரசியலுக்கு வர உள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எவர் கூறினார். மேலும் என் நிறம் நிச்சயம் காவியாக இருக்காது என குறிப்பிட்டு கூறினார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். பச்சோந்திகளுக்கு நிறம் நிரந்தரமல்ல, அனைவரும் அறிந்ததே என தெரிவித்துள்ளார். இதனை ஆதரித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான பதிலடி. எல்லா விதத்திலும் இவர் பச்சோந்தி தான் என கூறியுள்ளார்.