நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் அரசியலுக்காக தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சென்ற ஆண்டு தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பித்தன் பின் எந்தவொருப் புதுப்படத்திலும் நடிக்கவில்லை. ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த சபாஷ நாயுடு படத்தையும் அப்படியே கிடப்பில் போட்டார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமே தொகுப்பாளராகப் பங்கேற்று வந்தார். அதனால் சின்னத்திரை பார்வையாளர்களிடையில் அவருக்கு பெரிதான வரவேற்புக் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதுதான் தனது அடுத்தப் படமான இந்தியன் 2 வை அறிவித்தார்.
2.0 பட ரிலிஸில் ஏற்பட்ட இழுபறிகளால் இந்தியன் 2 தள்ளிப்போய்க் கொண்டே போனது. 2.0 ரிலிஸும் ஆகிவிட்டதால் இப்போது இந்தியன் 2 வை ஆரம்பிக்கும் பணிகளில் ஷங்கரும் லைகாவும் பிசியாக உள்ளனர். படத்திற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதமே ஆரம்பிக்கப்பட வேண்டிய படப்பிடிப்பு சிலக் காரணங்களால் ஜனவரிக்குத் தள்ளிப்போயுள்ளது.
ஆனால் கமலோ அரசியல் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறார். இந்தியன் 2 வைப் பற்றிக் கண்டுகொள்வதே இல்லையாம். மேலும் அரங்கம் அமைக்கும் பணிகள் மற்றும் ஷூட்டிங் தள்ளிப்போனது பற்றிக் கூட அவருக்கு எதுவும் தெரியாது என சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் கமல், நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான ராமநாதபுரத்தில் நிற்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தயாரிப்புத் தரப்புக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை தேர்தலில் போட்டியிட்டால் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட வேண்டும். அப்போது படப்பிடிப்பு பாதிக்கப்படும் அவர்கள் பயப்படுகின்றனர்.இதுபற்றிக் கமலிடமும் முறியிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் கமல் ஒத்துக்கொண்ட படத்தை முடித்துக் கொடுப்பதா இல்லை அரசியலில் முழுக் கவனம் செலுத்துவதா என்ற குழப்பத்தில் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.