ஏழைகளுக்கு காலத்தே கிடைக்குமா பிரதமரின் திட்டம்: கமல்ஹாசன் டுவீட்

Webdunia
புதன், 13 மே 2020 (10:25 IST)
உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவர்கள் கடந்த சில மாதங்களாகவே மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசையும் மத்தியில் ஆளும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் தனது டுவிட்டரில் அவர் மத்திய, மாநில அரசுகளை பால்கனி அரசுகள் என்றும் அவர் விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் இதற்கு அவருக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையின் கொரோனா காரணமாகபிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித உதவியும் செய்யவில்லை என கமலஹாசன் குற்றச்சாட்டி இருந்தார். இதனையடுத்து நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு திட்டங்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார் 
இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் கமலஹாசன் அதே நேரத்தில் சிறப்பு திட்டங்களை அறிவித்தால் அதை பாராட்டவும் செய்கிறார் என்பதும் ஆனால் அந்த திட்டம் உரியவர்களுக்கு சேர வேண்டும் என்ற அக்கறை கமல்ஹாசனின் ட்வீட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்