கமல்ஹாசன் டெல்லி விசிட்? பின்னணி என்ன?

Webdunia
சனி, 10 பிப்ரவரி 2018 (09:46 IST)
நடிகர் கம்லஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் தனது பலத்தை ஆழம் பார்த்துக்கொண்டார். அதன் பின்னர் வரும் 21 ஆம் தேதி கட்சியை துவங்கவுள்ளார். 
 
இதைத் தொடர்ந்து கமல் வரும் 21 ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணமாக தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். 
 
இந்நிலையில் சென்னையில் உள்ள கமல் அலுவலகத்தில் ரசிகர் மன்றத்தினர் கூடினர். அப்போது மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 6 பேர் என்ற முறையில் நிர்வாகிகளிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது.  
 
இதனை கமல் இறுதி செய்தயுடன் மன்ற நிர்வாகிகள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வரும் 12 ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
 
நடிகர் ரஜினி விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்தும் ரெடியாக உள்ளது, இனி அம்பு விடுவதுதான் பாக்கி என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்