பார்ட்-டைம் அரசியலுக்கு வாருங்கள்: பெண்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:51 IST)
பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நேற்று முதல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று சென்னை மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 182 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த கமல்ஹாசன் பெண்கள் பகுதி நேர அரசியலுக்கு வந்தால் நாடு நன்றாக மாறிவிடும் என்றும் எனவே பெண்கள் தங்களது வேலை முடித்துவிட்டு பகுதிநேர அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்