கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு !

திங்கள், 20 மே 2019 (13:27 IST)
இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

அரவக்குறிச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் ’உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் அவரது கொலைக்கு கேள்வி  கேட்க வந்துள்ளேன். இந்தியாவை பிரித்தாள நினைக்கும் சித்தாந்தத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், தீவிரவாதம் எந்த மதத்தின் பெயரில் இருந்தாலும் அது தவறு’ என்று  கூறினார். இந்த கருத்து அகில இந்திய அளவில் எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த பேச்சை அடுத்து கமலுகு எதிராக 76 இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கமல் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவானது. கைதாவதைத் தடுப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார் கமல். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதையடுத்து நீதிபதிகள் ‘15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி 4ஆவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு ஆஜராகி இரண்டு நபர்களின் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்தி முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்