சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி கண்டங்களை பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அதன்பின் இந்து என்ற அடையாளம் தேவையில்லை, அது ஆங்கிலேயர் கொடுத்தது. இந்தியா என்ற அடையாளம் போதும் என்றும் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதில் கூறிய எச்.ராஜா, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என்ற அடையாளம் தேவையில்லை, இந்தியர் என்ற அடையாளம் போதும் என்று கமல்ஹாசன் கூற முடியுமா? இந்துக்களை மட்டும் அவர் அடையாளம் வேண்டாம் என்று கூறுவதில் இருந்து இந்துக்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பை உணர்த்துகிறது.
மேலும் கமலஹாசனின் குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. கமலின் சகோதரர் சந்திரஹாசன் இறந்தபோது அவரது உடல் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது என்றும், கமல்ஹாசனின் இன்னொரு சகோதரர் சாருஹாசனும் கிறிஸ்துவ அமைப்புக்காக வேலை செய்து வருவதாகவும் எச்.ராஜா கூறினார்.