தமிழகத்தில் வாக்காளர்களாகும் 70 லட்சம் வட மாநிலத்தவர்! - தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றம்!

Prasanth K

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (09:53 IST)

பீகாரில் வாக்காளார் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் இது நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழகத்தில் வடமாநில வாக்காளர்கள் அதிகரிப்பார்கள் என கூறப்படுகிறது.

 

மத்திய அரசு சமீபத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்த நிலையில், முதற்கட்டமாக இந்த திருத்தம் பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பீகாரில் வசிக்கும் மக்கள், வாக்காளர் பட்டியல் இடையே உள்ள வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. தற்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 6.5 லட்சம் பேர் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து விட்டதால், அவர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.

 

இந்த சிறப்பு திருத்தம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த சுமார் 70 லட்சம் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இம்மாநில வாக்காளர்களாக கருதப்படுவர். இது தமிழக மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆகும். 

 

இவ்வாறாக வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் தமிழக வாக்காளர்களாக மாறுவது அரசியல் போக்கிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்