நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை - கமல்ஹாசன் விளக்கம்

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (16:07 IST)
நடிகர் கவுதமி உடனான உறவு பிரிந்தது குறித்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டதாக ஒரு அறிக்கை இன்று காலை சமூக வலைத்தளங்களில் வெளியானது.


 

 
நடிகர் கமல்ஹாசன் தனது மனைவி சரிகாவை பிரிந்த பிறகு கவுமதியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவரும் கணவன் மனைவி போலவே எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர். இந்நிலையில் திடீரென கவுதமி, நடிகர் கமல்ஹாசன் உடனான 13 ஆண்டுகால வாழ்க்கை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
 
இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்ததாக ஒரு அறிக்கை வெளியானது. ஆனால், நடிகர் கமல்ஹாசன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ இத்தருணத்தில் என் பெயரால்  யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்