சிறுமிக்கு நீதிக் கேட்டு போராட்டம்..! – ட்ரெண்டாகும் #justiceforsrimathi

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (13:03 IST)
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி ஸ்ரீமதி தற்கொலையில் மர்மம் இருப்பதாக போராட்டம் நடந்து வரும் நிலையில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கள்ளக்குற்ச்சி சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறைக்கு தெரியப்படுத்தாமலே மாணவியின் உடலை பள்ளி நிர்வாகம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்துவிட்டதாக பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர்.

மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களும் தீ வைத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களிலும் மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்க வேண்டாம் என எச்சரித்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உயர்மட்ட காவல் அதிகாரிகளை அழைத்து மாணவி வழக்கு குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்