ஸ்டெர்லைட் வழக்கில் திடீரென விலகிய நீதிபதிகள்! காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (11:18 IST)
ஸ்டெர்லைட் வழக்கை விசாரணை செய்து கொண்டிருந்த அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தூத்துகுடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் நீண்ட போராட்டம் நடத்தியதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஆண்டு மூடப்பட்டது இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைய மீண்டும் திறக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையின் நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. 
 
இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், நீதிபதி ஆஷா கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்தார். அவரை அடுத்து நீதிபதி ஆஷாவும் விலகுவதாக அறிவித்தார். 
 
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கை விசாரிக்கவில்லை என்று நீதிபதி சசிதரன் இந்த வழக்கில் இருந்து விலகியதற்கு காரணம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்