27-ஆம் தேதி ஜெயலலிதா வீடு திரும்புகிறார்?: தீபாவளிக்கு தயாராகும் அதிமுக!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (12:37 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வார காலமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்பொழுது உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என மருத்துவமனை வாசலிலேயே காத்திருக்கின்றனர் தொண்டர்கள்.


 
 
இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாக முதல்வர் ஜெயலலிதா தீபாவளிக்கு முன்னதாகவே வரும் 27-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்ற செய்தி உலா வருகிறது.
 
இது குறித்து அதிமுக வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல் வருமாறு, ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலரிடம் கார்டன் தரப்பு ஆலோசனை கேட்டிருக்கிறது. ஜெயலலிதாவை வரும் 27-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு மாற்றுமாறு ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
 
இதனால் போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டில் ஸ்ட்ரெச்சர் உள்ளே புகும் அளவுக்கு பெரிய சைஸ் ஆக மாற்றியமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. மேலும் தீபாவளி நேரத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை சசிகலா விரும்பவில்லை. எனவே போயஸ் கார்டனில் இருந்தபடியே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சசிகலா முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்