மகாராஷ்டிரா குகை கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்!! முன்னோர்கள் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (12:34 IST)
இந்து புராணக்கதைகளும் மனித வாழ்க்கையுடன் ஒன்றியதாக உள்ளது. முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. 

 
அதுபோல ஒன்றுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூறப்படும் சம்பவம். மகாராஷ்டிராவில் 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் “கேதாரேஸ்வர்” என்ற குகைக் கோயில் உள்ளது. 
 
இந்த குகைக்குள் நீரால் சூழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கத்தைக் காணலாம். லிங்கத்தை சுற்றியுள்ள தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும் என்பதால் லிங்கத்தை அடைவது கடினம். மழைக் காலங்களில் குகைக்கு அருகில் கூட செல்ல முடியாது.
 
சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் ஒரே ஒரு தூண் மட்டும் நன்றாக உள்ளது. இந்த தூணும் எப்போது சிதிலமடைகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நான்கு தூண்களும், “சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்” என அழைக்கப்படுகின்றன. எஞ்சி இருப்பது கலியுக தூண் மட்டும்தான்.
 
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டால், இலங்கை அழிந்துவிடும் என்று கூறுவதும் குறிப்பிடதக்கது.
அடுத்த கட்டுரையில்