ஜெ. நினைவிழந்து தான் அப்பல்லோ வந்தார்: போயஸ் கார்டனில் தாக்கப்பட்டார்!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (13:14 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு திகில் கலந்த சந்தேகங்களையும், குற்றச்சாட்டுகளையும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் முன்வைத்துள்ளார்.


 
 
சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எச்.பாண்டியன், கடந்த 2 நாள்கள் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன என கூறினார். அவர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோதே நினைவிழந்த நிலையில் தான் வந்தார்.
 
அதற்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் போயஸ் கார்டன் இல்லத்தில் வாக்குவாதம் நடந்துள்ளது. அதில் கைகலப்புகள் ஏற்பட்டுள்ளது. முடிவில் ஜெயலலிதா கிழே விழுந்துள்ளார், அவரை தூக்கி விடுவதற்கு கூட யாரும் முன்வரவில்லை என தகவல்கள் வருகிறது.
 
எனவே அப்பல்லோவில் நடந்ததை விட்டுவிட்டு அவர் அப்பல்லோ வருவதற்கு முன்னர் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடந்தது, அப்போது அங்கு யார், யார் எல்லாம் இருந்தார்கள் அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்