அடக்கடவுளே அடக்கம் செய்யப்பட்டது ஜெயலலிதாவே இல்லையா?: திகிலை கிளப்பும் நம்பி!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (15:44 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டார்.


 
 
அதன் பின்னர் அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே புதைக்கப்பட்டது. ஆனால் தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசியான எம்ஜிஆர் நம்பி என்பவர் திகில் கலந்து ஒரு சந்தேகத்தை இதில் எழுப்பியுள்ளார்.
 
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்ஜிஆர் நம்பி, அனைத்து இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பேசினார்.


 
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. 75 நாட்கள் அப்பல்லோவில் நாடகம் நடந்தது. செப்டம்பர் 22-ஆம் தேதியே ஜெயலலிதாவின் உடலை எங்கேயோ மறைத்துவிட்டார்கள் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. டிசம்பர் 6-ம் தேதி ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது ஜெயலலிதா உடல் மெழுகு பொம்மையா என சந்தேகப்படுகிறேன் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்