தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்குவிருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
அதில், நாமக்கல் மாவட்டத்தில் எரியூட்டும் மின் மயானத்தில் பணிபுரியும் ஜெயந்திக்கு (40), துணிவு-சாகசச் செயலுக்கான விருது, ரூ.5 லட்சம் காசோலை, சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும் பலர் தங்கள் துறையில் சாதித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து விருதுகள் பெற்றனர்.