ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சை?: வரவழைக்கப்பட்ட இரத்த உறவு!

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (10:25 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பூரண குணமடைந்துவிட்டதாகவும் அவர் வீடு திரும்புவதை அவரே முடிவு செய்வார் எனவும் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.


 
 
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர் சிகிச்சை ஒன்று செய்யப்பட்டதாக தற்போது தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி ஒரே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்காக அதிமுகவினர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். அன்று தான் அந்த சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது.
 
அப்பல்லோவில் ஜெயலலிதாவுடன் இருக்கும் சசிகலாவின் உத்தரவின் பேரிலேயே மாநிலம் முழுவதும் அதிமுகவினர் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவுக்காக சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அன்று சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர் சிகிச்சை ஒன்றை மேற்கொண்டனர் மருத்துவர்கள்.
 
ஜெயலலிதாவின் அந்த சிகிச்சைக்கு 5 நாட்களுக்கு முன்னர் அவரது அண்ணன் மகன் தீபக்கை அப்பல்லோவில் அட்மிட் செய்திருக்கிறார்கள். பின்னர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு பின்னரே மருத்துவமனையில் இருந்து தீபக் வீடு திரும்பியுள்ளார்.
 
ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்ட அந்த உயர் சிகிச்சைக்கும், அவரது இரத்த உறவான அண்ணன் மகன் தீபக் அப்பல்லோவில் அட்மிட் ஆனதற்கும் தொடர்பு இருப்பதாக தற்போது தகவல்கள் கசிகின்றன. இந்த சிகிச்சை தொடர்பான விபரங்கள் மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்