48 மணி நேரத்தில் மரணம்.. வௌவ்வால் கறி தின்றதால் பரவும் புதிய நோய்! - ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

புதன், 26 பிப்ரவரி 2025 (09:35 IST)

ஆப்பிரிக்காவில் வௌவ்வால் கறி சாப்பிட்டதால் புதிய வகை நோய் பரவி வருவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் அவ்வப்போது புதிய நோய்களின் பாதிப்பு சில நாடுகளில் அடிக்கடி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படியாக ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புதிய நோய் பரவியுள்ளது.

 

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்டு வரும் இந்த புதிய நோயால் பிப்ரவரி 10 முதல் 16ம் தேதிக்குள் மட்டும் 53 பேர் மரணமடைந்துள்ளனர். 431 பேருக்கு நோயின் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோவில் வௌவ்வால் கறி சாப்பிட்ட 3 சிறுவர்களிடம் முதன்முதலில் இந்த நோயின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன்மூலம் மற்றவர்களுக்கு பரவியதாக சொல்லப்படுகிறது.

 

இந்த நோய் பாதித்த 48 மணி நேரத்திற்கு பாதிக்கப்பட்ட்டவர்கள் இறந்து விடுவதால் நோயின் தீவிரம் குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்