உயிரோடு இருக்கும் போது அம்மா; இறந்த பின்னர் ஜெயலலிதாவா: நீதிபதியின் கண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (14:51 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் அவரது வாரிசு பிரச்சனை பெரிதாக நடந்து வருகிறது.
 
பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். ஆனால், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியிருந்தனர்.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை சமீபத்தில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற வாதத்தில், ஜெயலலிதாவின் உடலிலில் இருந்து டிஎன்ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
இந்த வழக்கின் விசாரணையின் போது ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் அம்ருதா சோபன் பாபுவை ஏன் தந்தை என உரிமை கொண்டாடவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் உயிருடன் இருக்கும் போது அம்மா என்று அழைத்தவர்கள் எல்லாம் தற்போது ஜெயலலிதா என பெயர் சொல்லி அழைக்கின்றனர். காலையில் மாலைப்போடுவதும், மாலையில் காலை வாரி விடுவதுமே தமிழகத்தின் தலைவிதியாகிவிட்டது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்