ரிலையன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற துடிக்கும் ஜியோ!!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (14:07 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் பிரச்சைனயால் தவித்து வருகிறது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. 
 
ஆர்.காம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் பைபர் உள்ளிட்ட சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.35,000 கோடி வரை திரட்ட முடியும் என தெரிகிறது. இதை வாங்குவதற்கு ரிலையன்ஸ் ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிகிறது. 
 
இதன் மதிப்பு சுமார் ரூ.19,000 கோடி இருக்கக்கூடும். அதேபோல் டவர்களை வாங்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக துவதாக தெரிகிறது. ஆர்.காம் நிறுவனத்துக்கு 43,600 டவர்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.8,000 கோடி முதல் ரூ.9,000 கோடி வரை இருக்கும் என தெரிகிறது.  
 
மேலும், 1.72 லட்சம் கிலோ மீட்டர் அளவு பைபர் நெட்வொர்க்கின் மதிப்பு ரூ.4,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது குறித்து ஆர்.காம் மற்றும் ஜியோ ஆகிய இரு  நிறுவனங்களும் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்