கொசு, ஈக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்! – சசிகலா வருகை குறித்து ஜெயக்குமார்!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (11:04 IST)
சசிக்கலா விடுதலையாகி நாளை சென்னை வரும் நிலையில் அதிமுக அலுவலகம் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம் முடிந்ததால் நாளை சென்னை வர உள்ளார். சசிக்கலா வருகையையொட்டி அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம் உள்ளிட்டவற்றில் கடும் போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “சசிக்கலாவை கண்டு அதிமுகவுக்கு பயம் இல்லை. அவரது சொத்துகளை ஏமாற்றிய டிடிவி தினகரன் தான் பயப்பட வேண்டும். சசிக்கலா அதிமுக அலுவலகத்தில் நுழைய முயன்றால் அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கொசு, ஈக்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்