மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ நேற்று வெளியாகி இணையதளத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த வீடியோ நேற்றுதான் இணையதளத்தில் வெளியானாலும் கடந்த மாதமே வெளிநாட்டு அமைப்பு ஒன்று இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அனுப்பியதாகவும் ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் மகளிர் ஆணையம் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.