தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அதில் கூறியிருப்பதாவது:
மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
ஜல்லிக்கட்டின் போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டி முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.",