காவிரி மேலாண்மை அமைக்க கோரியும், அதை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, அஇஅதிமுக ஜெ.தீபா அணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில், தமிழகத்தின் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் கால்பதித்து போராட்ட களம் காண, ஈரோடு ரயில் நிலையம் முன்பு நாளை வியாழன் 12-04-2018 அன்று காலை 11.00 மணியளவில் எனது தலைமையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்’ நடைபெறவுள்ளது.
நம் பேரவை மாவட்டம் ஒன்றியம் நகரம் பேரூராட்சி ஊராட்சிகள் கிளை கழகத் தொண்டர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தவறாமல் போராட்த்தில் கலந்து கொண்டு தமிழக விவசாயிகளுகு்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என ஜெ.தீபா அணி மற்றும் ஜெ.தீபா பேரவை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.