சென்னையில் இன்றும் கனமழை - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (09:43 IST)
இன்று பகல் 12 மணிக்கு பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதில், சென்னையின் பள்ளமான பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது.  மீஞ்சூர், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் சேதமடைந்தன.
 
அந்நிலையில், நேற்று மாலை சென்னையில் பலத்த மழை பெய்தது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் அவ்வளவாக மழை பெய்யவில்லை. 
 
இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு மேல் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், காலை முதலே சென்னையில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.
 
நேற்று முன் தினம் இரவு கனமழை பெய்யும் எனவும், நேற்று மாலை மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கூறியது தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்