300 கண் மருத்துவமனைகளை கொண்ட குழுமமாக விரிவடையும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர்!

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:50 IST)
டிபிஜி மற்றும் டெமாசெக் முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 650 கோடி ரூபாயை இதற்காக திரட்டியுள்ளது
 
சென்னை / 17 ஆகஸ்ட், 2023: டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் (DAHCL) அதன் தற்போதைய முதலீட்டாளர்களான டிபிஜி குரோத் (ஒரு முன்னணி உலகளாவிய மாற்று சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நடுத்தர சந்தை மற்றும் வளர்ச்சி ஈக்விட்டி செயல்தளம்) மற்றும் டெமாசெக் (சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய முதலீட்டு நிறுவனம்) ஆகியவற்றிடமிருந்து ரூ. 650 கோடி நிதியை திரட்டியிருக்கிறது. டாக்டர் அகர்வால்ஸ்-ன் விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தை இந்த நிதி திரட்டல் சுற்று வழங்கும். 150+ மையங்கள் என்ற தற்போதைய அளவை அடுத்த 3 ஆண்டுகளில் 300+ மையங்களாக விரிவுபடுத்த இம்மூலதனம் பயன்படுத்தப்படும்.

மும்பை, பஞ்சாப், மத்திய மற்றும் வட இந்திய நகரங்களில் புதிய மருத்துவமனைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், தெலங்கானா, ஆந்திர பிரதேஷ், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உட்பட, தனது முக்கிய சந்தைகளில் வளர்ச்சியையும், வெற்றியையும் இந்நிறுவனம் தொடர்ந்து பெற்று வருகிறது.  வலையமைப்பின் விரிவாக்கத்தோடு சேர்த்து ஸ்மைல், லேசர் கேட்ராக்ட் (கண் புரைநோய்) அறுவைசிகிச்சை மற்றும் நீரிழிவு சார்ந்த விழித்திரை நோய் மற்றும் வயது தொடர்புடைய விழிப்புள்ளிச்சிதைவு போன்ற கண் நோய்களுக்கு சிகிச்சையளிக்க மிக நவீன தொழில்நுட்பங்கள் போன்றவற்றிலும் இந்நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ளும்.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் (டாக்டர்) அமர் அகர்வால் கூறியதாவது: “டிபிஜி மற்றும் டெமாசெக் போன்ற முன்னணி முதலீட்டாளர்களின் ஆதரவு கிடைத்திருப்பது உண்மையிலேயே ஒரு உலகளாவிய உடல்நல பராமரிப்பு நிறுவனமாக திகழ வேண்டும் என்ற எமது தொலைநோக்கு திட்டத்தில் நாங்கள் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது. எமது நோயாளிகளுக்கு சேவை வழங்க தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் மிக நவீன தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும் நாங்கள் வெவ்வேறு துறைகளின் சிறப்பான நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறோம். மிகச்சிறப்பான கண் பராமரிப்புக்கு சமீபத்திய, நவீன தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் எமது செயல்பாடுகளை மேலும் விரிவாக்கவும் இப்புதிய முதலீடு பயன்படுத்தப்படும்.”

டிபிஜி குரோத் நிறுவனத்தின் பிசினஸ் யூனிட் பார்ட்னர் திரு. அங்கூர் ததானி கூறியதாவது: “இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் சாத்தியம் குறித்து நாங்கள் தொடர்ந்து உற்சாகமும், ஆர்வமும் கொண்டிருக்கிறோம். சிறப்பான நிதிசார் செயல்பாட்டோடு சேர்த்து உலகத்தரத்தில் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்ற டாக்டர் அகர்வால்ஸ்-ன் குறிக்கோளை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கண் சிகிச்சை பராமரிப்பு பிரிவில் உலகளவில் முதன்மை வகிக்கும் தலைவராக வளர்ச்சியடைவதற்கான அனைத்து திறனையும், சாத்தியத்தையும் டாக்டர் அகர்வால்ஸ் கொண்டிருக்கிறது.”

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அதில் அகர்வால் பேசுகையில், “எமது குழும வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஆதரவளிக்க இந்த முதலீடு பயன்படுத்தப்படும். சிறிய மருத்துவமனைகள் மற்றும் சங்கிலித் தொடர் நிறுவனங்களை கையகப்படுத்துவது உட்பட எமது வலையமைப்பில் புதிய மருத்துவமனைகளை நிறுவி விரிவுபடுத்துவதும் இதில் உள்ளடங்கும். அடுத்த 3 ஆண்டுகளில் எமது சேவை வலையமைப்பை இரட்டிப்பாக்குவது எமது நோக்கமாகும். ஏற்கனவே நாங்கள் செயல்பட்டுவரும் சந்தைகளில் இன்னும் ஆழமாக ஊடுருவலுடன் மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், டெல்லி, உத்திர பிரதேஷ் மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் தீவிர விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.

அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் 2 மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களில் 100 அடிப்படை கண் சிகிச்சை கிளினிக்குகளையும் நாங்கள் நிறுவவிருக்கிறோம். ஆப்பிரிக்கா நாடுகள், எங்களது விரிவாக்க பணிக்கான மற்றொரு புவியியல் பகுதியாக இருக்கும். ஏற்கனவே 15 மருத்துவமனைகளை ஆப்பிரிக்காவில் நடத்திவரும் நாங்கள், கென்யா, ஜாம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் எமது செயல்பாட்டை இன்னும் விரிவுபடுத்துவோம். இந்நாடுகளில் புதியதாக 10 கண் சிகிச்சை மையங்களை தொடங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்,” என்று கூறினார்.

இந்த நிதிதிரட்டல் பரிவர்த்தனைக்கு டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட்-ன் நிதிசார் ஆலோசகராக வேதா கார்பரேட் அட்வைசர்ஸ் நிறுவனம் செயல்பட்டிருக்கிறது.

டாக்டர் அகர்வால்ஸ் குழுமம் குறித்து

மருத்துவ சிகிச்சை மையமாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம் தனது சேவையை தொடங்கியது. கண் மருத்துவ பராமரிப்புத்துறையில் முன்னோடியான பேராசிரியர் (டாக்டர்) அமர் அகர்வால் தலைமையின்கீழ் இக்குழுமம் இயங்கி வருகிறது. ஒட்டப்படும் IOL, PDEK மற்றும் பாக்கோநிட் போன்ற பல புரட்சிகரமான, புத்தாக்கமான அறுவைசிகிச்சை செயல்உத்திகளை டாக்டர் அமர் அகர்வால் அறிமுகம் செய்திருக்கிறார். இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் 151 மையங்களை (140 மருத்துவமனைகள் மற்றும் 11 கண் சிகிச்சை கிளினிக்குகள்) உள்ளடக்கியதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இயங்கிவருகிறது.

இந்தியாவில் 14-க்கும் அதிகமான மாநிலங்களிலும் மற்றும் 10 நாடுகளிலும் இக்குழுமம் செயல்பட்டு வருகிறது. 500-க்கும் கூடுதலான கண் மருத்துவ நிபுணர்கள் மற்றும் 3500 பணியாளர்கள் இதன் பணியமைவிடங்களில் திறம்பட பணியாற்றிவருகின்றனர். இதுவரை 15 மில்லியனுக்கும் கூடுதலான நோயாளிகளுக்கு இதன் மையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தரமான கண்சிகிச்சை மட்டுமன்றி கண் மருத்துவவியல் மற்றும் தொடர்புடைய பிற துறைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் டாக்டர் அகர்வால்ஸ் வழங்கிவருகிறது. நாடெங்கிலும் விரைவான விரிவாக்கத்தின் மூலம் வளர்ச்சியடைந்து வரும் டாக்டர் அகர்வால்ஸ் குழுமம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 75க்கும் அதிகமான மையங்களை தனது வலையமைப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

கண்புரை நீக்கம், லேசர் வழியாக சரிசெய்தல், வெட்ரியோ-விழித்திரை அறுவைசிகிச்சை, கண்பாவை மாற்றுப்பதியம், கண் அழுத்தநோய்க்கு சிகிச்சை மற்றும் மாறுகண் பார்வைக்கு சிகிச்சை போன்றவை உட்பட, தனது மருத்துவ மையங்களில் முழுமையான கண் பராமரிப்பு சேவைகளை இக்குழுமம் வழங்குகிறது.  இதற்கும் கூடுதலாக, இதன் முக்கிய மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான கண் மருத்துவவியல், கண்சார்ந்த புற்றுநோயியல், மூளை நரம்பியல் சார்ந்த கண் மருத்துவவியல், விழியில் ஒட்டறுவை சிகிச்சை மற்றும் விழியின் இரத்தநாளப் படல சிகிச்சை ஆகியவற்றையும் வழங்கி வருகின்றன.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம் குறித்து மேலும் தகவலறிய காணவும்: www.dragarwal .com

டிபிஜி (NASDAQ: TPG): உலகெங்கிலும் முதலீடு மற்றும் இயக்கச் செயல்பாடுகளுக்கான குழுக்களுடன் $139 பில்லியன் சொத்துக்களை நிர்வகித்து வரும் TPG, 1992 – ம் ஆண்டில் யுஎஸ். – ன் சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் நிறுவப்பட்டு, இயங்கி வரும் ஒரு முன்னணி உலகளாவிய மாற்று சொத்து மேலாண்மை நிறுவனமாகும்.  கீழ்வரும் ஐந்து பன்முக செயல்தளங்களில் TPG முதலீடு செய்து வருகிறது. 

மூலதனம், வளர்ச்சி, தாக்கம், ரியல் எஸ்டேட் மற்றும் சந்தை தீர்வுகள், ஒத்துழைப்பு, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகிய முக்கிய அம்சங்களினால் இந்நிறுவனத்தின் தனித்துவமான செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.  எமது ஃபண்டு முதலீட்டாளர்கள், போர்ட்போலியோ நிறுவனங்கள், மேலாண்மை குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு மதிப்பை சேர்த்து வழங்கவும், விரிவுபடுத்தப்பட்ட தனித்துவமான கண்ணோட்டங்களை உருவாக்கவும் விரிவான திறன்களோடும், நிபுணத்துவத்தோடும் திட்டங்கள் மற்றும் துறைகள் மீதான ஆழமான அனுபவத்தை எமது குழுக்கள் நேர்த்தியாக ஒருங்கிணைத்து செயல்படுகின்றன.  அதிக தகவலுக்கு காணவும்: www.tpg.com

டெமாசெக் குறித்து

டெமாசெக், 2023 மார்ச் 31 அன்று யுஎஸ் $287 பில்லியன் (S$382 பில்லியன்) என்ற நிகர போர்ட்ஃபோலியோ மதிப்பை கொண்டிருக்கும் ஒரு உலகளாவிய முதலீட்டு நிறுவனமாகும். இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு மாற்றத்தை உருவாக்க “ஒவ்வொரு தலைமுறையும் வளம் பெற வேண்டும்” என்ற டெமாசெக்-ன் குறிக்கோள் அதனை வழிநடத்துகிறது. முனைப்புள்ள ஒரு தீவிர முதலீட்டாளராக, முற்போக்கு சிந்தையுள்ள நிறுவனமாகத் திகழும் டெமாசெக் நீண்டகாலஅளவில் நிலைப்புத்தன்மையுள்ள மதிப்பை வழங்குவது மீது பொறுப்பை கொண்டிருக்கிறது.

மூடி’ஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் மற்றும் S&P குளோபல் ஆகிய தர மதிப்பாய்வு முகமைகளால் முறையே Aaa/AAA என்ற ஒட்டுமொத்த கார்பரேட் ரேட்டிங் தரநிலைகளை டெமாசெக் பெற்றிருக்கிறது. சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டெமாசெக் உலகெங்கிலும் 9 நாடுகளில் 13 அலுவலகங்களுடன் இயங்குகிறது: ஆசியாவில் பெய்ஜிங், ஹனோய், மும்பை, ஷாங்காய், ஷென்சென் மற்றும் சிங்கப்பூர்; மற்றும் ஆசியாவிற்கு வெளியே லண்டன், பிரஸ்ஸல்ஸ், பாரிஸ், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டிசி மற்றும் மெக்சிகோ நகரம் ஆகியவற்றில் இந்த அலுவலகங்கள் செயல்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்