சாதகமா? பாதகமா? இருமுறை களநிலவரத்தை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்...

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (22:04 IST)
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வந்தனர்.

இந்நிலையில் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % ஓட்டுகள் பதிவாகியுள்ளது என தமிழகாத் தேர்தல் அதிகாரிர சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இரண்டு முறை ஐபேக் நிறுவனத்திற்கு முக. ஸ்டாலின் விசிட் அடித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இன்று தமிழகம்  முழுவதும் வெளியாகக் கூடிய களநிலவரங்களை ஸ்டாலின் தேனாம்பேட்டையிலுள்ள  தேர்தல் நிபுணரின் அலுவலகமான ஐபேக்( I pac   சென்று உன்னிப்பாக கவனித்து வந்தார்.  காலை 11 மணிக்கு ஒருமுறை சென்ற அவர் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை ஸ்டாலின் சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்