திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அவரது பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பேசியபோது மோடியின் டார்ச்சர் காரணமாக தான் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் இறந்தனர் என்று கூறினார் அதன் பிறகு அவர் அதற்கு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜகவினர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி குறித்த பேச்சுக்கு உதயநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது